தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து தீயை கட்டுப்படுத்தினர். அவர்களின் துரிதமான செயல்பாட்டினால் பெரிய அளவிலான சேதமும், அண்டை கட்டிடங்களுக்கு பரவியிருக்கக் கூடிய அபாயமும் தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்தால் அண்ணாநகர் – விவிடி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டதுடன், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
