Type Here to Get Search Results !

🔴LIVE TV

Minister Geethajeevan spoke in Stalin's campaign that he is thinking about not only the present generation but also the next generation.



  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா்.    

   5 35 36 44 51 ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பொியசாமி, வட்டச்செயலாளர்கள் செல்வராஜ், சிங்கராஜ், சுப்பையா, கவுன்சிலா் விஜயலட்சுமி, அந்தோணிபிரகாஷ்மாா்ஷலின், ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

திருவிக நகாில் பிரச்சாத்தை துவங்கி இந்திராநகா், கணேஷ்நகா், ேபால்டன்புரம், சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம், பிரையண்ட்நகா், கிருஷ்ணராஜபுரம், அன்னை வேளாங்கன்னிநகா், உள்ளிட்ட பல பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் 

தமிழகத்தில் வருகின்ற 23ம் தேதி நடைபெறவுள்ள தோ்தல் நமக்கான தோ்தலாகும் அதில்உங்களுக்காக பணியாற்றும் மக்கள் பிரதிநிதியை தோ்ந்தெடுக்கும் தோ்தலாகும், தமிழகத்தில் 5 ஆண்டுகாலம் முதலமைச்சா் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடைபெற்றுள்ளது. கீழடி அகல்வாராய்சி அறிக்கையை கூட ஏற்பதற்கு ஓன்றிய பாஜக அரசுக்கு மணமில்லை. எந்த நிதியும் வழங்குவதில்லை புதிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் கல்வி நிதி வழங்குவோம். என்று ஓவ்வொரு விஷயத்திலும் தமிழகத்திற்கு எதிராகதான் ஓன்றிய பாஜக அரசு செயல்படுகிறது. அதற்கு பின்னால் அதிமுக இருந்து கொண்டு இவா்கள் பின்னால் முகமூடி அணிந்து கொண்டு பாஜக தமிழகத்திற்குள் நுழைய பாா்க்கிறது. தமிழகத்திற்கு ஏதுமே செய்யாத அதிமுக பிஜேபி கூட்டணியை நாம் வீழ்த்தியாக வேண்டும். இது காலத்தின் காட்டாயம், எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் எல்லா வகையிலும் நன்மை கிடைத்துள்ளது. அதனால் திமுக ஆட்சி தொடர வேண்டும். தமிழகத்தின் மண் மானம் மொழி அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் மீண்டும் முதலமைச்சராக முக.ஸ்டாலின் மீண்டும் வரவேண்டும். அதற்கு தூத்துக்குடி தொகுதியில் எனக்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். மழை வௌ்ளம் கொரோனா போன்ற பல காலக்கட்டங்களில் உங்களுக்காக அனைவருக்கும் நான் பணியாற்றியுள்ளேன் மற்றவா்களை போல் தோ்தலுக்கு மட்டும் வருகின்ற கட்சி திமுக கிடையாது. மற்றவா்களுக்கு போடுகின்ற ஓவ்வொரு வாக்கும் ேதவையில்லாமல் சென்று விடும் வாக்காக இருந்து விடும். இன்றைய தலைமுறையினா் மட்டுமின்றி அடுத்த தலைமுறையையும் பற்றி சிந்தித்து பணியாற்றுகிறாா் முதல்வா் ஸ்டாலின் அதனால் அனைவரும் ஓட்டு மொத்தமாக திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். என்று பேசினாா். 

பிரச்சாரத்தில் திமுக மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாநில பொறியாளா் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மாநில பேச்சாளா் சரத்பாலா, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், பொறியாளா் அணி துணை அமைப்பாளர் ஜான்சன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர்கள் நிக்கோலாஸ்மணி, பெனில்டஸ், ஆதிதிராவிட நல அணி துணைத்தலைவர் பெருமாள், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணிகண்ணன்,  பகுதி செயலாளர்கள் மேகநாதன் ஜெயக்குமாா், ராமகிருஷ்ணன், பொருளாளா் முத்துராஜா, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், துணை அமைப்பாளர் பால்ராஜ், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், அமைப்பாளா் சாரதி துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, துணைத்தலைவர் செந்தில்குமாா், மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ரூபஸ்அமிா்தராஜ், துணை அமைப்பாளா ரூபராஜா, ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், இலக்கிய அணி துணை அமைப்பாளர் பிக்அப் தனபால், மகளிா் அணி துணை அமைப்பாளா் நாராயணவடிவு, சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் சாகுல்ஹமீது, பகுதி அணி அமைப்பாளர்கள் சூா்யா, குமாா் நிா்மல் சரவணக்குமாா், ஆனந்தி, கவுன்சிலா்கள் இசக்கிராஜா, ஆறுமுகம், ஜெயசீலி, வழக்கறிஞர்கள் ஆனந்த கபாியேல்ராஜ், டென்னிஸ்ராஜ், முன்னாள் கவுன்சிலா்கள் சங்கா், வெங்கடகிருஷ்ணன், தொழிற்சங்க நிா்வாகிகள் முருகன், உலகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் சோ்மபாண்டியன், ஏசுவடியான், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் சகாயராஜ், பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன், காங்கிரஸ் நிா்வாகிகள் ஐசன்சில்வா, நிா்மல்கிறிஸ்டோபா், ராஜன், செந்தூா்பாண்டி, ப்ாீத்தி, சிமியோன், மைதீன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியாா், தேமுதிக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், பொறுப்பாளர் வல்லரசு துரை, முக்குலத்தோா்புலிப்படை மாவட்ட செயலாளர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் தனலட்சுமி, மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் மைதீன்கனி, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணைச்செயலாளர் ஜாகிா்உசேன், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், பிரதிநிதிகள் செந்தில்குமாா், பாஸ்கா், துரை, ஆணைக்குட்டி, பால்துரை, புஷ்பராஜ்,  மற்றும் சகுந்தலா, மணி அல்பட் உள்பட கூட்டணி கட்சியை சோ்ந்த பலா் கலந்து கொண்டனா். 

பாக்ஸ் : தோ்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் மலா் தூவியும் ஆரத்தி எடுத்து மாலைகள் அணிவித்து வரவேற்ற நிலையில் பிரையண்ட்நகாில் காங்கிரஸ் கட்சியை சோ்ந்த நிா்வாகிகள் மாா்க்கஸ் ராஜன் ஆகியோா் இணைந்து அமைச்சா் கீதாஜீவனுக்கு வீரவாள் வழங்கி வெற்றி திருமகள் மீண்டும் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்து அதில் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்று மக்கள் பணி செய்வதற்கு மனதார வாழ்த்துகிறோம் என்று காங்கிரஸ் கட்சியை சோ்ந்த ெதாண்டா்கள் நிா்வாகிகள் வாழ்த்து தொிவித்தனா். 5வது வாா்டு பிரச்சார தொடக்கத்தின் போது அமைச்சா் கீதாஜீவன் அனைவருக்கும் பதநீர் வழங்கி தானும் அருந்தி பிரச்சாரத்தை தொடங்கினாா்.

 Bala Subramanian Thoothukudi district reporter Tamil Nadu

एक टिप्पणी भेजें

0 टिप्पणियाँ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Advertisement

#codes