Journalist Farooq Bashad
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு இராணிப்பேட்டை முத்துக்கடை
பேருந்து நிறுத்தத்தில் நடத்தப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல்
அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெயூ. சந்திரகலா இ.ஆப,அவர்கள்
கலந்து கொண்டார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டி பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு
நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இராணிப்பேட்டை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா
இ.ஆ.ப., அவர்கள் இன்று தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு,
041.இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்களர்களிடையே 100 சதவிகிதம்
வாக்குப்பதிவு, தேர்தல் நாள் குறித்து இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில்
ஓவியக் கலைஞர்கள் வரைந்த தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை பார்வையிட்டு,
விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாக்காளர்களுக்கு வழங்கினார்கள்.
இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் திருவிழா 2026, நமது வாக்கு நமது கடமை, 100
சதவிகிதம் அனைவரும் வாக்களிப்போம், தேர்தல் நாள் 23.4.2026 உங்கள் வாக்கு உங்கள்
கடமை மற்றும் தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓவியங்கள் கோலங்கள்
வரையப்பட்டு இருந்ததை பார்வையிட்டு பாராட்டினார்கள். தொடர்ந்து அந்த வாசகத்தின் முன்
அனைவரிடம் இணைந்து புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து பேருந்து நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள், பயணிகளிடம் அனைவரும்
தவறாமல் 100% வாக்களிக்க வேண்டும், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும்
போன்ற துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் /
வருவாய் கோட்டாட்சியர் .ராஜி, மகளிர் உதவி திட்ட அலுவலர்கள் வெங்கடேசன்,
ரமேஷ், வட்டாட்சியர் நடராஜன், நகராட்சி ஆணையாளர் செந்தில் குமார் மற்றும்
லதா ஓவியக்கலை குழு சண்முகம் மற்றும் குழுவினர், மகளிர் குழுக்கள், பொதுமக்கள்
கலந்து கொண்டனர். செய்தியாளர் பாரூக் பாஷா
