தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சமூக ஆர்வலர் அன்னை வீ.ஜி.சரவணன் போட்டியிடுகிறார் அதே போன்று அண்ணா திமுகவில் எஸ். பி சண்முகநாதன் போட்டியிடுகிறார் அதே போன்று இந்தியா கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடுகிறார் இதில் எஸ். பி சண்முகநாதன் கடந்த 5 வருட காலமாக தூத்துக்குடியில் மாவட்ட செயலாளராக இருந்து கொண்டு அங்கு அண்ணா திமுக மாநில வர்த்தக அணி செயலாளராக இருக்கும் சி.த.செல்ல பாண்டியனிடம் உள் கட்சிக்குள் பனிப்போர் செய்வதிலேயே குறியாக இருந்தார் அதனால் பண்டாரம் பட்டி ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அவருடைய சொந்த ஊராக இருந்தும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை கவனிக்க முடியாத சூழலும் தூத்துக்குடி மீது கவனம் செலுத்துபவராக இருந்தார் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி பெற்ற பின்பு மாதத்திற்கு இருமுறை அல்லது ஒரு முறை அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக வருவதோடு சரி தொழிலதிபரான அவர் தன்னுடைய சொந்த தொகுதியிலேயே தங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் அன்னை வீ.ஜி .சரவணன் அரசியலுக்கு வருவதற்கு முன்பே கொரோனா தொற்று காலம் மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் கடந்த ஐந்து வருடங்களாக ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உணவு இல்லாமல் வாழும் 200 நபர்களுக்கு மதியம் இரவு உணவு வழங்குவதோடு விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் கல்வி உதவித்தொகை ஆதரவற்ற நிலையில் இறந்தவர்களுக்கு அடக்கம் செய்வதற்கான குளிர்சாதன பெட்டி சொர்க்க ரதம் ஈமைக்கிரியை செய்வதற்கு உள்ள செலவுகளை செய்துள்ளார். மேலும் தாமிரபரணி ஆறு ஓடும் இப்பகுதியில் மக்கள் குடிநீர் பற்றாக்குறை உள்ள தொகுதியாக இந்த தொகுதி உள்ளதால் அன்னை வீ.ஜி சரவணன் தன்னுடைய சொந்த செலவில் மூன்று டாட்டா ஏஸ் வாகனங்களை வைத்து அதில் வாட்டர் டேங்க் அமைத்து தொகுதியில் தண்ணீர் கேட்கும் மக்களுக்கு பகுதிவாரியாக கொண்டு சேர்த்தார். இது போன்ற அரசியலில் இல்லாமலேயே மக்களுக்கு உதவி செய்ததாலேயே மக்களுக்கு அவர் முகம் தெரியக்கூடிய வகையில் பரிட்ச்சயமான நபராக இருந்துள்ளார் ஆனால் 10 வருடங்களாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த ஊர்வசி அமிர்தராஜ் தன்னுடைய சொந்த தொகுதியில் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் அப்பகுதி மக்களாலேயே கடந்த ஐந்து வருட காலமாக நீங்கள் எங்கு சென்றீர்கள் இப்பகுதியில் உள்ள குறைகளை கேட்பதற்கு நீங்கள் ஏன் வரவில்லை என்று அவரிடம் எதிர் கேள்வி கேட்கின்றனர் ஆனால் தற்போது விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் விசில் சின்னத்திற்கு கோடை காலத்தில் மக்களிடம் வாக்கு சேகரிக்கும் செல்லும் இடங்கள் எல்லாம் பெண்கள் இளைஞர்கள் முதியவர்கள் சிறுவர்கள் என உற்சாகமாக ஆரத்தி எடுத்து விசில் அடித்து வரவேற்பு கொடுக்கின்றனர் ஆகையால் இந்த முறை ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விசிலின் சத்தம் ஓங்கி ஒலிக்கின்றது.
Mother Viji Saravanan's whistle sounds in Srivaikundam constituency of Thoothukudi district, Tamil Nadu.
Tags
