Journalist Farooq Pasha. .
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026
வாக்குப்பதிவு நாள் ஏப்ரல் 23, 2026
"தேர்தல் திருவிழா
தமிழ்நாட்டில் பெருவிழா"
இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்
முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்
தேர்தல் 2026 முன்னிட்டு, வாக்காளர்களிடையே தேர்தல் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில், இராணிப்பேட்டை மாவட்டத்தின் தேர்தல் இலச்சினை
(election logo) வெளியிட்டார்கள்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்
2026 முன்னிட்டு, இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற
தொகுதிகளில் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 18 வயது நிரம்பிய அனைத்து
வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் மற்றும் வாக்காளர்கள் பணம்,
பொருள், பரிசுக்கோ விலை போகாமல் நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும்.
மேலும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும்
என்ற இலக்கை அடைய தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும்
பல்வேறு துறைகளின் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு
இராணிப்பேட்டை மாவட்டத்தின் இலச்சினையான செம்மான் இதன்
உருவத்தைக் கொண்டு செம்மண் வாக்கு என்ற இலச்சினையினை
இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்
முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட
ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் வெளியிட்டார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் பரவலாகக்
காணப்படும் புள்ளி மான்கள், இந்தியத் துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக்
கொண்ட ஒரு அழகான நடுத்தர அளவிலான விலங்காகும். இதன் பொன்னிறம்
கலந்த பழுப்பு நிறத் தோலில் வாழ்நாள் முழுவதும் மாறாமல் இருக்கும் வெள்ளை
நிறப் புள்ளிகள், காடுகளில் மரங்களுக்கு இடையே ஊடுருவி வரும் சூரிய
ஒளியில் இவை மறைந்து வாழ மிகச்சிறந்த உருமறைப்பு (camouflage)
வழங்குகின்றன. இராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக காணப்படும் இந்த
செம்மான் உருவத்தை மாவட்டத்தின் தேர்தல் விழிப்புணர்வு சின்னமாக
இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இராணிப்பேட்டை மாவட்டத்திற்கான தேர்தல்
விழிப்புணர்வு பாடலினையும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்
தலைவர் வெளியிட்டார்கள். இதனைத் தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு கலை
நிகழ்ச்சிகளை மாவட்டம் முழுவதும் ஏற்படுத்திட உறவுகள் கலை குழுவின்
கலை பயணத்தை தொடங்கி வைத்து, மாவட்டம் முழுவதும் தேர்தல் விழிப்புணர்வு
ஏற்படுத்திட அனுப்பி வைத்தார்கள்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திட்ட இயக்குனர் மகளிர்
திட்டம் நேர்முக உதவியாளர்கள் தேர்தல் பூமா பொது கீதா செய்தி மக்கள் தொடர்பு
அலுவலர் உதவி திட்ட அலுவலர்கள் வெங்கடேசன் அருண் ரமேஷ் மற்றும்
துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் பாரூக் பாஷா
