Journalist Farooq Pasha
இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்
தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற
பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி 200 ஆட்டோ
ஓட்டுனர்கள் பங்குபெற்ற ஆட்டோ விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து
துவக்கி வைத்தார்கள்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில்
வாக்காளர்கள் 100 சதவிகிதம் தங்களது வாக்கு பதிவுகள் செய்ய வேண்டும் என
மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல்
அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (10.4.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்
நுழைவுவாயில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம்
வாக்குப்பதிவினை வலியுறுத்தி இராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து
அலுவலகம் சார்பில் 200 ஆட்டோ ஓட்டுனர்கள் பங்குபெற்ற
விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
உறுதிமொழி
ஆட்டோ
ஜனநாயகத்தின் மீது ஈடுபாடுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்
நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான
தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு
தேர்தலிலும், சாதி, மத, இன, வகுப்பு, மொழி ஆகிய வேறுபாடுகளுக்கு
அப்பாற்பட்டும், எந்தவொரு தூண்டுதலுக்கும் ஆட்படாமலும், அச்சமின்றியும்,
விழிப்புணர்வுடன் வாக்களிப்போம் என்றும் உறுதி கூறுகின்றோம்." என மாவட்ட
தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில்
ஆட்டோ வாகன ஓட்டுநர்கள் அனைவரும் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்
கொண்டனர்.
பின்னர், ஆட்டோக்களில் தேர்தல் விழிப்புணர்வு குறித்து ஓட்டு வில்லைகள்
(Stickers) ஓட்டி வாக்களர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் தேர்தலில் வாக்குச்சாவடிக்கு
சென்று 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டுமெனவும், உங்கள் அருகில் வசிக்கும்
பொதுமக்களிடமும் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்டத்தில் 100
சதவிகிதம் பதிவாக மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட
வேண்டுமென கேட்டுக் கொண்டார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.பேபி இந்திரா, திட்ட
இயக்குநர் மகளிர் திட்டம் செந்தில்குமரன், இராணிப்பேட்டை தேர்தல்
நடத்தும் அலுவலர் ராஜி, நேர்முக உதவியாளர் (தேர்தல்) பூமா,
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மோகன், வட்டாட்சியர் (தேர்தல்)
செல்வி.வசந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை செய்தியாளர் பாரூக் பாஷா
